புரவி புயலால் நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஈ.பி.டி.பியின் மனிதாபிமான பணிகள் தீவிரம்!

Monday, December 7th, 2020

புரவி சூறாவளியால் ஏற்பட்ட பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வுறு பகுதிகள் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிறைவுசெய்து கொடுக்கும் தீவிர நடவடிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச பொறுப்பானர்கள் தலைமையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரருமான டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தற்போது குறித்த உதவிப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக யாழ் குடாநாட்டின் வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம், நல்லூர், வடமராட்சி மற்றும் தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவலங்களை கண்டுவருகின்றனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி நாச்சிக்குடா குமுழமுனை உள்ளிட்ட பகுதிகளுடன் வவுனியா மன்னார் முல்லைத்தீவு திருகோணமலை உள்ளிட்ட ஏனைய மாவட்டத்திலும் அதிகளவான மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்

இந்நிலையில் பாதிப்புகள் தொடர்பில் அம்மாவட்டங்களின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் பிரதச பொறுப்பாளர்கள் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்களது தேவைப்பாடுகளையும் அவரச உதவிகளையும் மேற்கொண்டு வருவதுடன் வடிகால்களை சீர்செய்துகொடுத்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிபாக பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளுடன் அவர்களுக்கான உணவுப் பொதிகளையும் உலருணவு பொதிகளையும் வழங்கிவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று முற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - உபவே...
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெர...
லக்ஸபான மின் உற்பத்தி பிரிவு ஒன்று செயலிழப்பு - இன்றுமுதல் மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு!