யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!
Sunday, December 6th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புரெவிப் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது
வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம் - அஞ்சல்மா அதிபர்...
|
|
|


