மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!
Sunday, December 6th, 2020
இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 182 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 652 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 20 ஆயிரத்து 90 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 840 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுலாகும் நடைமுறை!
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டது!
5,000 ரூபா கொடுப்பனவு இன்றுமுதல் நடைமுறைக்கு!
|
|
|


