நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுலாகும் நடைமுறை!
Saturday, July 6th, 2019
இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு 7 சுதந்திர மாவத்தையில் இருந்து கிரீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கால் நடையாகவோ சைக்கிள்கள் மூலமோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வறட்சியான காலநிலை தொடரும் - வளிமண்டல திணைக்களம் !
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங...
நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா - மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!
|
|
|


