வறட்சியான காலநிலை தொடரும் – வளிமண்டல திணைக்களம் !
Saturday, March 30th, 2019
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடர கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் நாட்டின் 6 மாவட்டங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்கு பின்னரே குறிப்பிடத்தக்களவான மழை வீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது சுகா...
ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு - இராணுவத் தள...
|
|
|


