இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
Wednesday, December 2nd, 2020
கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றையதினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, கொரோனா தொற்றுக்குள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 10ஆம் திகதி பிரதமர் யப்பான் விஜயம்!
குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு - நகர அபிவிருத்தி அதிகார சபை...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு - வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற ...
|
|
|


