2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனம்!

Saturday, November 3rd, 2018

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

திணைக்களங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் தமக்குரிய பணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய வேண்டியதே சிறந்தது என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாட்டின் வன அடர்த்தியை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக, 2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வரட்சியினால் பாதிப்புற்ற நெற்செய்கைக்காக, விதை நெல்லை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் சுற்றுநிரூபமொன்றைத் தயாரிப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106