வீட்டு முற்றத்தில் வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டியின் சடலம்!

Tuesday, March 22nd, 2016

சுன்னாகம் பகுதியில் மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று நேற்றுத் திங்கட்கிழமை (21-03-2016) இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வநாயகி (வயது -73) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகச்  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கண் பார்வை அற்ற நிலையில் தனிமையில் வசித்து வந்த குறித்த மூதாட்டியை, உறவினரொருவர்  வந்து பார்வையிட்டுச்  செல்வது வழமை.இந்நிலையில், வழமை போல் உறவினர் நேற்றுத் திங்கட்கிழமை சென்று பார்த்த போது குறித்த மூதாட்டி முற்றத்தில் உயிரிழந்த நிலையில் வெயிலில் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். மரண விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106