தனியார் துறையினரின் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – தொழில் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, November 21st, 2020
கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகங்களினூடாக குற்றச்சாட்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்தார்.
கிடைத்த முறைப்பாடுகளில் சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சம்பள பிரச்சினை தொடர்பில் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கோவை அனுப்பப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பித்துக்கது.
Related posts:
பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புச் சேவை நவீன தொழில்நுட்பத்துடன் சமூக ஊடகங்களுக்கு மாற்றம்.
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் வி...
உலக சுகாதார தினம் இன்று - ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!
|
|
|


