2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!
Saturday, November 21st, 2020
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. குறித்த வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகள் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் கடந்த செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த புதன்கிழமைமுதல் வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.
அத்துடன் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவு செலவு திட்டம் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.
கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்திற்கு இந்த முறை 04 நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106