ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- ஜோகோவிச் ‘சாம்பியன்’
Wednesday, August 3rd, 2016
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோராண்டோவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), உலக தர வரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரியை சந்தித்தார்.
90 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ரோஜர்ஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வெல்வது இது 4-வது முறையாகும். அவர் வென்ற 66-வது சர்வதேச பட்டம் இதுவாகும். பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 3-வது இடம் வகிக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-6 (7-2), 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
Related posts:
தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதில் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி - அசங்க குறுசிங்ஹ!
இலங்கைக்கு எதிரான தென்னாபிரிக்க டெஸ்ட் அணி வீரர்கள் அறிவிப்பு!
இனவெறுப்பு செயற்பாடுகளை ஒழிக்க 10 ஆண்டுகளுக்குள் 25 கோடி அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு - அமெரிக்க த...
|
|
|


