மியான்மர் பொதுத்தேர்தல் – ஆங் சான் சூகியின் கட்சி முன்னிலை!

Monday, November 9th, 2020

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மியான்மரில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் என மொத்தம் ஆயிரத்து 171 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளன.
மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன. அதன்பின்னர் தேர்தல் நாளன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்எல்டி) அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆங் சான் சூகியின் கட்சியே அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106