நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
Saturday, November 7th, 2020
சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
8 தொடக்கம் 10 மாத காலப்பகுதிக்கு தேவையான போதுமானளவு மருந்து வகைகள் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் மருந்து வகைகளை தயாரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் பல மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் எதிர் காலத்தில் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதை குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடும் வறட்சி - வடக்கில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக ...
தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் சட்டம் - மீறினால் 50000 ரூபா அப...
|
|
|


