மேலும் 400 பேருக்கு கொரோனா – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020

நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்து ஒன்பதாயிரத்து 492ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 563 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஏழாயிரத்து 373 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 29 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை இன்றுமுதல் கைது செய்ய நடவடிக்கை - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ...
அதிகூடிய வெப்பநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்’ - சிரேஷ்ட வளிமண்டலவியல் நிபுணர் சமிந்த டி ...
மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் !