கொரோனா அச்சத்திற்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்!
Monday, November 2nd, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய நாளை காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதுடன், வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஊடகப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106