இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் அனுமதி – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, October 31st, 2020

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இந்நிலையில், 2020 அக்டோபர் 28 திகதி “கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தைப் பூரணமான பல்கலைக்கழகம் ” என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106