காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!
Tuesday, August 2nd, 2016
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற போது ராடாரிலிருந்து திடீரென மறைந்து காணாமல்போன மலேசிய விமானம் வேண்டுமென்றே கடலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
காணாமல் போன போயிங் 777 வகை விமானத்தின் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களிள் இருந்து அது உறுதிப்படுத்தப்படுவதாக உலக புகழ்பெற்ற விமான விபத்துகள் ஆய்வாளரான லெரீ வான்ஸ் அவுஸ்திரேலியாவின் செய்தி சேவையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
விமான இறக்கைகளின் பாகங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , அதன் சிதைவுகளை ஆராய்ந்ததில் விமானியின் கட்டுப்பாட்டிலேயே விமானம் கடலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு!
டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த புடின்!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!
|
|
|


