மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 25th, 2020
நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படாது எனவும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் –
கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாட்டில் கடந்த வாரம் பேலியகொட மீன் சந்தையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் அங்கு வந்து சென்றவர்கள் என பலருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் நாடளாவிய ரீதியில் பல நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன், பல இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106