பொது சுகாதார பரிசோதகர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்!
Wednesday, October 21st, 2020
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் உட்பட அநேக பொது சுகாதார பரிசோதகர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தங்களை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்துடன் இவ்வாறான மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் கடமையை நிறைவேற்றுகிறோம் என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் ஏ.யு.ரி.குலதிலக தெரிவித்துள்ளார்.
மரண அச்சுறுத்தல்களைப் எதிர்கொண்ட பத்து சுகாதார பரிசோதகர்கள் தமது பாதுகாப்புக்காக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா ...
இரட்டைக் குடியுரிமையுடைய எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா? - நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடு...
|
|
|


