இலங்கைக்கு 4 அதி நவீன பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா!

Sunday, October 18th, 2020

அவுஸ்ரேலிய பாதுகாப்புத்துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் குறித்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சி.ஆர் இயந்திரங்களும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

அத்துடன் குறித்த பி.சி.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106