இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!
Saturday, October 10th, 2020
நம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் 71 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் தியாகபூர்வமானதும் வெற்றிகரமானதுமான பங்களிப்பானது புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 71 ஆவது அண்டு நிறைவுதினம் குறித்து இன்றையதினம் தனது முகநூல் பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலம் பதிவிட்டுள்ளதாவது –
பல்வகைப்பட்ட அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் மற்றும் அழிவுகளிலிருந்து எமது தாய்நாட்டைப் பாதுகாக்கும் காவல் அரணாக நமது தரைப்படை தொடர்ந்தும் ஆற்றி வரும் உன்னத பணி நிகரற்றது.
தனது நெடிய வரலாற்றின் இன்றைய காலகட்டத்தில் – கோவிட் 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் எமது இராணுவத்தின் வீரர்கள் வழங்கிவரும் அதியுயர் சேவையானது – மதிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் என்பவற்றில் மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் எமது இராணுவம் அளித்து வரும் மேலான பங்களிப்பினை இந்த தருணத்தில் நான் நன்றியுடன் நெஞ்சில் இருத்தி எமது இராணுவத்தின் ஒரு படை வீரனாக நானும் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தேன் என்ற பெருமிதத்துடன் இன்றைய நாளில் இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு நிறைவிற்கு, எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் மரியாதையையும் அர்ப்பணிக்கின்றேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106