இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக, மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை!
Friday, October 9th, 2020
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கலமெடியான பிரதேசத்தில் நிறுவி, அபிவிருத்தி செய்வதற்கு அறிவுறுத்திய பிரதமர், அதன் தொழில்நுட்ப பீடத்தை தற்போது இயங்கிவரும் மட்டக்குளிய பிரதேசத்தில் அப்பிரதேசத்தை மையமாகக் கொண்டு அபிவிருத்தி செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமையவே இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அவரினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மீனவ மற்றும் கடற்படை பொறியியல் நிறுவனம் 2014 ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க சட்டத்திற்கமைய உத்தியோகப்பூர்வ பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கை சமுத்திர பல்கலைக்கழகமொன்றை நிறுவும் வகையில் தான் கடற்றொழில் அமைச்சராக காணப்பட்ட போது கலமெடியாவ பிரதேசத்தில் இடமொன்று வழங்கப்பட்ட போதிலும், கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர்களினால் சமுத்திர பல்கலைக்கழகத்தினை தங்களது அதிகார வரம்பிற்குள் கொண்டு செல்வதற்கு முயற்சித்தமையால் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசாங்கத்தின் புதிய நோக்கின் கீழ் மீனவ, சமுத்திர விவகார, கடற்படை பொறியியல் மற்றும் கடற்படை அறிவியல் துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்கான விநியோகத்தை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106