‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!
Tuesday, October 6th, 2020
‘முடக்கம்’ என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இன்று செ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனங்கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு வருவதனை கருத்திற்கொண்டே மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 1400 பேரில் 495 பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்றனர் என்றும் எனவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு நேற்றிரவு முதல் 125க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர் என்பதால், தாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106