தற்காலிக ஏற்பாடே 20 ஆவது திருத்தம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020

20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில் –  “நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகவே எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கினர். எனவே, அதனை நிச்சயம் செய்வோம். அதற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

ஏனெனில், 19 ஆவது திருத்தச் சட்டத்தால் இந்த நாடு அழிவை நோக்கிப் பயணித்தது. ஜனாதிபதி மற்றும் பிரதமரால் இணைந்து செயற்படமுடியாத நிலை ஏற்பட்டது. சுயாதீனம் என்ற போர்வையில் பழிவாங்கல்களுக்காக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அதாவது, ‘தங்கையைக் காண்பித்து அக்காவை மணம் முடித்துவைப்பதுபோல’ 19 ஊடாக நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவை, 20 ஊடாக நீக்கப்படும்.

அத்துடன் ஜனாதிபதிக்கு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் நான்கு வருடங்களே இருக்கின்றன. இக்காலப் பகுதியில் நாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, ஆளுங்கட்சி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே, எவரிடமும் சென்று ஆதரவு தேடவேண்டிய அவசியம் இல்லை. வெளியில் இருந்து சிலர் வந்து இணைந்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106