இன்றுமுதல் சலுகை விலையில் தேங்காய்!
Wednesday, September 23rd, 2020
கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்றுமுதல் சலுகை விலையில் தேங்காய் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட பகுதிகளுக்கு லொரிகளின் மூலம் சலுகை விலையில் தேங்காய் விநியோகிக்கப்படும் என்று தோட்டத் தொழில் அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் தேங்காயை 60 ரூபாய்க்கு சலுகை விலையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
உரிய விலை இன்மை – முருங்கை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு!
|
|
|


