உரிய விலை இன்மை – முருங்கை செய்கையாளர்கள் கடும் பாதிப்பு!

Friday, August 9th, 2024

முருங்கைக்காய்க்கு உரிய விலை இன்மையால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடபகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என கொள்ளளவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது முருங்கை செய்கையின் அநேகமான விவசாயிகள் முருங்கைக்காய் அறுவடையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் முருங்கைக்காய்க்கு உரிய விலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடமும் இதே போன்று முருங்கை செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை ஏதிர்கொண்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வன்னி பகுதியில் குரங்கு, யானை உள்ளிட்டவற்றுக்கு இரவு பகலாக காவலிருந்து பாடுபட்டு  எந்தப்பயனுமற்றுப்போயுள்ளதாவும்,  இவரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கையினை அறுவடை செய்ய முடியாது கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அறுவடை செய்யும் பொழுது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் விலை காணப்படுவதாக முருங்கைச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுமார் நூறு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் - பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
நன்கொடையாக கிடைத்த மருந்துகள் விற்பனை - விசாரணை செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அம...