புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
Wednesday, September 16th, 2020
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிற்கு புதிய வீதி ஒழுங்கு பரிச்சயமாவதற்காக பெண்பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், பெண் பொலிசாரை மட்டும் அந்த பணியில் ஈடுபடுத்தியமை சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய வீதி ஒழுங்கின்படி பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்கும்படி முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர்களிற்கு பொலிசார் அறிவுறுதியுள்ளனர்.
மேலும் இந்த வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!
மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு - ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரை...
இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!
|
|
|


