மேலும் 472 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
Friday, September 11th, 2020
கொரோனா காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் முதலான நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 472 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 648 ரக விமானத்தில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 405 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேநேரம், கட்டார் – டோஹாவில் இருந்து அந்த நாட்டு விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக விமானத்தில் 67 பேர் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரையும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : பரிந்துரைகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை!
இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா!
மேலும் சில காலத்திற்கு பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்ப...
|
|
|


