சீனாவுக்கான புதிய தூதுவராக பாலித கோஹன நியமனம்!

Monday, September 7th, 2020

சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கின்றார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதுடன் முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் அவர் இதற்காக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வெளி இடங்களிலிருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பிரதி பொல...
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரம் பிரகடனம் – வடக...

தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையி...
தமிழகக் கரையை அடைந்தது நிவர் புயல் - நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை அவதா...
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவு - வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி, இது...