மீசாலையில் வழிப்பறி – ஆலயம் சென்று வீடு திரும்பிய பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு!

Monday, September 7th, 2020

தென்மராட்சி மீசாலை பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ௲

மீசாலை வடக்கு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் அவரது வீட்டிற்கு அண்மையில் வைத்து குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்து பெண் வீடு நோக்கி சென்ற போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே அவரை தள்ளிவிட்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சங்கிலி அறுத்துக்கொண்டு தப்பிச்சென்ற இளைஞரை அருகில் இருந்த சிசிரிவியில் பதிவாகியுள்ளது.

குறித்த படத்தில் அவர் முகத்தை மறைத்து மாஸ்க் அணிந்துள்ளார். அறுக்கப்பட்ட சங்கிலி சுமார் 2 பவுண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் - ஒரேநாளில் 31 பேர் பலி - சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவ...
வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகள் இணைய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வ...
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்க...