4 வாள்கள் ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது!
Monday, September 7th, 2020
பல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கைது நடவடிக்கை நேற்று 06 ஆம் திகதி இரவு இடம்பெற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பான 4 வாள்களை விற்பனை செய்வதற்கு சந்தேக நபர் முற்பட்டுள்ளார்.
இந்த முயற்சி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தெரிய வந்ததை அடுத்து வாள்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் தங்கவேலாயுதம் பரமேஸ்வரிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுத...
போக்குவரத்து தொடர்பில் விரைவில் புதிய நடைமுறை !
அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு - நிதியமைச்சு தெரிவித்துள்ளது!
|
|
|
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் - நனோ தொழில்நுட்ப நிறுவனம...
புகையிரத திணைக்கள செலவினத்துடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்கவில்லை -அமைச்சர் பந்துல குணவர்த்தன ச...
நாடாளுமன்று மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் - யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!


