பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகையிலுமே நிலைகொண்டிருக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்தல்!

Tuesday, March 22nd, 2016

கிளிநொச்சி மாவட்டத்திலே இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் எழுந்திருப்பதாக தென்பகுதி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பொலிஸாரும், படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறும், இன விகிதாசாரத்தைப் பேணும் வகையிலுமே நிலை கொண்டிருக்க வேண்டுமென தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கில் இராணுவத் தலையீடுகள்  மிகவும் அதிகரித்திருந்த ஒரு காலப் பகுதியிலே, அதனைப் படிப்படியாகக் குறைத்து, சிவில் நிர்வாகத்தை கொண்டு வருவதில் நாம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை சுமுகமான முறையில் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுவந்தோம். ஆனால், இன்று நாம் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றிராத நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இணக்க அரசியல் ரீதியாகப் பங்கெடுத்துவருபவர்களால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே நேரம், இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன்வைப்போர்தான் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிலும் இணைத் தலைவர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மாவட்டங்களில் இவ்வாறான பிரச்சினைகள் நிலவுகின்றதெனில், அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமையை இவர்கள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உரிய அக்கறையும், திறமையும் வாய்த்திருக்க வேண்டும். இதைவிட்டு,  இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வெறுமனே ஊடக செய்தி வாய்ப்புகளுக்காக மாத்திரம் எழுப்பிக் கொண்டிருக்காமல், அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைச் சாத்திய வழிமுறையில் அணுக வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106