பட்டதாரிகளிற்கு நியமன கடிதம் வழங்கிவைப்பு!
Wednesday, September 2nd, 2020
வேலையில்லாபட்டதாரிகளிற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
தொழில் பெறும் 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சின் இணையத்தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தது.
அவர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட, அரச அதிபர் சமன்பந்துலசேன, மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார், பிரதேச செயலாளர்களான க.சிவகரன், இ.பிரதாபன், நா.காமதாசன், பிரதி தேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த மற்றும் இராணுவ அதிகாரிகள் பட்டதாரிகளிற்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்திருநதமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ள இடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களிடத்தில் சிறப்புக் கவனமெடுக்கப்படும் - கல்வி அமைச்சர்!
ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை - இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!
|
|
|


