கண்ணாடி போத்தல்களுக்கு வருகிறது தடை – களி மண் குவளைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!

Wednesday, August 26th, 2020

அலுவலகங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் சேமித்து வைக்கும் கண்ணாடி போத்தல்களை நீக்கிவிட்டு அதற்காக களி மண் குவளைகளை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும், புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய ஆணையத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தல்களை பயன்படுத்துவதனால் பல்வேறு சுகாகதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆணையத்தின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய சுவையுடன் நீரை குடிக்க கூடிய வகையில் களி மண்ணால் போத்தல்களை உருவாக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே நீர் சேமித்து வைத்ததற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி போத்தல்களில் பெரும்பான்மையானவை மதுபான போத்தல்கள்  என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106