அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020

பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்ரெம்பர்  15 ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று (22.08.2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்த போதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் குறித்த பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்தர்களில் சுமார் 1500 இற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பினை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்களில் தற்காலிகமாக ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறும் மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் - சிறுபான்மைக் கட்சிகளின் கூட்ட...
வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்களுக்கு நலன்புரி நிவாரணத் திட்டத்தில் மு...

கூட்டமைப்பு நடத்திக்கொண்டிருப்பது வேடிக்கை அரசியல் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முட...
நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் - அமைச்சர்களான டக்ளஸ் தே...