பொது மன்னிப்பு வழங்கும் 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
Thursday, August 20th, 2020
பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிறு குற்றங்களுடன் தொடர்புடையோருக்கே ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில் கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை 17ஆம் திகதி அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்
தேர்தலைப் பிற்போடாதீர்கள் - அரசிடம் கோருகின்றது கபே அமைப்பு!
நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம...
|
|
|


