கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை !
Thursday, August 20th, 2020
கொடிகாமத்தில் நேற்று காலை திடீரென 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொடிகாமம் பேருந்து தரிப்பிடத்தின் மேல் தளத்தில் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனைகளை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மேற்கொண்டிருந்தனர். கொரோனா சமூகப் பரவலை இனங்காணும் நோக்கில் தென்மராட்சிப் பகுதியில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஆரம்பமாக அண்மையில் சாவகச்சேரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்தியாவின் படுகொலை: டிசம்பர் 13ம் திகதி விசாரணை!
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் குறித்தும் புதிய பொலிஸ்மா அதிபருட...
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இ...
|
|
|


