கொரோனா தொற்று: இந்தியாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Wednesday, August 19th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 65 ஆயிரத்து 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் புதிதாக 1089 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 6 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Related posts:
சீன அரசாங்கம் இலங்கைக்கு தொழிநுட்ப உதவி!
தொழில் முயற்சிக்கு கூட்டுக் கடன் திட்டங்கள் - ஜனாதிபதி!
முதல் 10 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை 5 இலட்சத்து 70 ஆயிரத்தை அண்மித்துள்ளது - சுற்றுலா அபிவிரு...
|
|
|
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையம் தொடர்பில் கூறப்படும் வாதத்தை நம்பத் தயாரில்லை – இராணுவத் தளபதி...
2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் - இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் தெரிவிப்பு!
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப...


