ஆகஸ்ட் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
Friday, August 14th, 2020
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்நிலையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது..
இதற்கிடையில் ஜனாதிபதி நேற்று மேலும் பல வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது மற்றும் காமினி செனரத்தை பிரதமரின் செயலாளராக நியமிப்பது தொடர்பாக இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் புதிய செயலாளர்களின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமி...
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் க...
நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுமுதல் ஆ...
|
|
|


