நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது – பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சி தெரிவிப்பு!
Sunday, August 9th, 2020
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கையின் அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சியின் பிரபு லோட் நெசிபி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் ஆரம்ப கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பன அகற்றப்பட்டு தற்போது இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய புதிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென அவர் பாராட்டியுள்ளார்.
இதன் மூலம் சகல சமூகங்களும் ஒன்றிணைந்து இலங்கையினை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும் என தாம் நம்புவதாகவும் பிருத்தானிய கொன்சவேற்றிவ் கட்சியின் பிரபு லோட் நெசிபி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூத்த அறிவிப்பாளர் சி.நடராஜசிவம் காலமானார்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நால்வர் மரணம் - 41 பிரதேச செயலக பிரிவுகளில் 5 ஆயிரத்து 790 போர் பாத...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் - இலங்கையி...
|
|
|


