கைமாறியது விமானங்கள்!
Saturday, July 30th, 2016
பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரகவிமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
தோழர் ரங்கன் அவர்களின் மாமியாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
வடக்கில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5 வீத புதுப்பிக்...
|
|
|


