கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு: திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!
Friday, July 31st, 2020
அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில், கட்சி செயலாளர்கள் கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வீடு வீடாகச் சென்று அல்லது தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய கட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் 2020.08.03 ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனை கைவிட தீர்மானித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இருப்பினும், ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்ளிரவில் விளம்பர பிரச்சாரம் முடிவடைந்ததாலும், மேலும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106