அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை!
Monday, July 27th, 2020
இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவை பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால் இந்த கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்குமாறு வேறு சேவை பிரிவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கையை செயற்படுத்த முடியுமா இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...
பிரதமர் இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட வேளையில் மின் துண்டிக்கப்பட்டது எப்படி? -விசாரணை ஆரம்பம் என பொத...
தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி - இலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|


