அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு – சபையின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, July 22nd, 2020
கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொரோனா நெருக்கடியால் அழுத்தங்களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகையை செலவு செய்ய நேரிடுமெனவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
100 கோடி கிளிசீறியா மரக்கன்றுகளை நடும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
ஆசிரியர் இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்றது - இலங்கை ஆசிரியர் சங்கம்!
சீரற்ற வானிலை: 10 பேர் பலி - 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
|
|
|
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்...
இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் விசேட பேச்சுவார்த்தை – கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க...
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி - டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ...


