2020 நாடாளுமன்ற தேர்தல் : சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டுகிறது -மஹிந்த தேசப்பிரிய!

Saturday, July 18th, 2020

தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவதால் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு ரூபாய் செலவாகும்.

இதனடிப்படையில் பொதுத் தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்காக தேர்தல் ஆணைக்குழு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் – விசனத்தில் கிள...
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பேச்சாள...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசி...
மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் பறிக்கப்படாதிருப்பதற்காவே பாதீட்டை வெற்றியடைய செய்திருந்...
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை -...