அனைத்து நாடுகளுக்கும் தென்சீனக் கடல் பகுதி பொதுவானது – இந்தியா!
Friday, July 17th, 2020
தென்சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என இந்தியா தெரிவத்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவிக்கையில்,
“தென் சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. தென்சீனக் கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடல் பகுதியை வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் உரிமைக்கோரி வருகின்றன.
இந்நிலையில் குறித்த பரப்பு முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என சீனா அறிவித்துள்ளதுடன், அந்த பகுதியில் படைபலத்தை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !
இலங்கைக்கு மீண்டும் அனுப்புங்கள் – சட்டவிரோதமாக இந்தியா சென்ற அகதிகள் கோரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் கடிதம்!
|
|
|


