முகக்கவசத்தின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் – இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!
Thursday, July 16th, 2020
முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுமாறும், பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் சளியை வெளியேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை...
அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காண முடியாது - வெளிவிவகார அமைச்சர் ...
|
|
|


