மீண்டும் கொரோனா அச்சம் : குடாநாட்டில் பொருட்கள் கொள்வனவு செய்ய மறுபடியும் முண்டியடிக்கும் மக்கள்!
Saturday, July 11th, 2020
நாட்டில் நேற்றையதினம் பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பொருட்களை கொள்வனவுசெய்ய முண்டியடித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
மீண்டும் கொரோனா பரவினால் மீளவும் பிரதேசங்கள் முடக்கப்படும் நிலை அறிவிக்கப்படலாம் என பரவும் வதந்தியையடுத்து, வர்த்தக நிலையங்களில் மக்கள் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த லொக் டவுன் நேரத்திலும் மக்கள் தேவையற்ற பரபரப்புடன் பெருமளவு பொருட்களை வாங்கிக் குவித்ததில், தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், பல வர்த்தகர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி பகல் கொள்ளை அடித்தனர். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் முக்கிய அரிசி ஆலைகள் பல, அரிசி விலையை உயர்த்தி இருந்தன.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் குறிப்பிட்ட முகாமொன்றிலேயே அடையாளம் காணப்பட்டனர், அத்துடன் இதனால் சமூகத்தொற்றாகும் அபாயமில்லையென அரசு அறிவித்துள்ள நிலையிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தேவையற்ற பரபரப்பை வெளிப்படுத்தி வருகின’றமை குறிப்பிடத்தக்கது..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106