மூன்று மாதங்களுக்கு பின்னர் நாளையதினம் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Sunday, July 5th, 2020
கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளையதினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு காலை 7.30முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 5 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களுக்கும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு சமுகமளித்தால் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
அடுத்த மாதம் 27 ஆம் திகதிமுதல் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106