ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!

Sunday, June 21st, 2020

ரஷ்யாவில் கொரோனா தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2 பேர் கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 ஆயிரத்து 889 பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 161பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 952ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 2 இலட்சத்த 34 ஆயிரத்து 358பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 3 இலட்சத்து 34 ஆயரித்து 592பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளமை குறிபிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106